டெம்பர்டு கிளாஸ் ஒட்டுவது எப்படி?
சரியாக ஒட்டுவதற்கு கீழே உள்ள வீடியோ மற்றும் வழிமுறைகளைப் பார்க்கவும்.
1. திரையை சுத்தம் செய்
ஈரமான மற்றும் காய்ந்த வைப்ஸ் (Wipes) கொண்டு துடைக்கவும்.
2. தூசியை அகற்று
தூசி நீக்கும் ஸ்டிக்கரை வைத்து ஒட்டி எடுக்கவும்.
3. கவரைப் பிரி
கண்ணடியின் பின்புறம் உள்ள கவரைப் பிரிக்கவும்.
4. சரியாகப் பொருத்து
கேமரா அல்லது ஸ்பீக்கரை கணக்கிட்டு நேராக வைக்கவும்.
5. அழுத்தவும்
கண்ணாடி தானாக ஒட்ட நடுவில் மெதுவாக அழுத்தவும்.
6. குமிழியை நீக்கு
காற்று குமிழி இருந்தால் ஓரத்திற்குத் தள்ளி விடவும்.
🔒 இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் குறிப்பு (மிக முக்கியம்!)
கிளாஸ் ஒட்டிய பிறகு உங்கள் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொஞ்சம் மெதுவாக வேலை செய்கிறதா? கவலை வேண்டாம், உங்கள் புதிய கிளாஸில் எந்தப் பிரச்சனையும் இல்லை!
நமது டெம்பர்டு கிளாஸ் திரைக்கு மேல் ஒரு உறுதியான பாதுகாப்பை வழங்குவதால், உங்கள் மொபைலின் சென்சார் புதிய கிளாஸ் வழியாக உங்கள் கைரேகையை "மீண்டும் பதிய" வேண்டும்.
உடனடியாக அன்லாக் செய்ய எளிய வழி:
- உங்கள் மொபைலின் Settings > Security-க்குச் செல்லவும்.
- பழைய கைரேகைகளை (Fingerprints) Delete செய்யவும்.
- கிளாஸை முழுமையாக ஒட்டிய பிறகு உங்கள் கைரேகைகளை மீண்டும் Add செய்யவும்.
💡 Pro Tip: நீங்கள் அதிகம் பயன்படுத்தும் கட்டைவிரலை இரண்டு தனித்தனி கைரேகைகளாக இரண்டு முறை பதிவு செய்யவும். உங்கள் மொபைல் உடனடியாக அன்லாக் ஆகும்!